அழகிரி உள்ளிட்ட தி்முக பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு தரக் கோரி போலீஸில் மனு

இதுதொடர்பாக கமிஷனர் பாலசுப்ரமணியனிடம் திமுகவினர் கொடுத்துள்ள
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுமென்றே தி.மு.க.வினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் கெட்ட எண்ணத்தோடும் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் பல்வேறு அச்சுறுத்தும் சுவரொட்டிகளை ஒட்டி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், வருகிற 18 ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எந்த மந்திரியும் தொகுதிக்குள் நுழைய முடியாது என எச்சரித்துள்ளார்.
அவரது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு முன்னாள் அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கட்சி முன்னணி பிரமுகர்கள் பல நாட்களாக மதுரையில் முகாமிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மதுரையில் கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் உள்ள மதுரையில் திட்டமிட்டு வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார்கள்.
அவர்களுக்குள்ளேயே அசம்பாவிதங்களை ஏற்படுத்திக் கொண்டு அப்பழியினை தி.மு.க.வினர் மீது போட சதி செய்து வருகிறார்கள். எனவே வருகிற 18 ந் தேதி மதுரைக்கு வரும் அனைத்து வாகனங்களையும், மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளையும் கடுமையாக சோதனை போட வேண்டும்.
மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளின் செயல்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இத்தகைய செயல்களால் மதுரை மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். எனவே முன்னாள் அமைச்சர்கள் மீதும், சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மக்களின் அச்சுறுத்தல்களை போக்கும் வகையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி, போலீஸ் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் பேக்ஸ் மூலம் புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications