கர்நாடக சட்டசபையிலிருந்து மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. விலகல்
பெங்களூர்: கர்நாடகத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் ராஜினாமா செய்யும் 2வது காங்கிரஸ் எம்.எல்.ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்டாக ராஜினாமா செய்தவர் பெயர் நாராயணசாமி. இவர் கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை எம்.எல்.ஏ ஆவார். இவர் சபாநாயகர் போபய்யாவை நேரில் சந்தித்து தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்தார். அதை போபய்யாவும் உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்ற பின்னர் பதவி விலகும் 3வது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ இவர். இதற்கு முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த அஸ்வத் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் ஜகலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரா விலகினார்.
இதன் மூலம் காங்கிரஸின் பலம் தற்போது 73 என்பதிலிருந்து 71 ஆக குறைந்து விட்டது. கெளடா கட்சியின் பலம் 28லிருந்து 27 ஆக சுருங்கி விட்டது.
ஏற்கனவே 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்பட 16 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications