காஷ்மீருக்குள் ஊடுறுவக் காத்திருக்கும் 80 பாக். தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்: அடுத்த பத்து நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுறுவ 80 அதி தீவிர தீவிரவாதிகள் காத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
அதிபர் பராக் ஒபாமா வருகையின்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து விரிவான தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக 80 தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களுடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுறுவக் காத்திருப்பதாக காஷ்மீர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, அல் பாதர் உள்ளிட்ட தீவிரவாத பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது உள்ளே நுழைந்து விட இவர்கள் காத்துள்ளனராம்.
அடுத்த பத்து நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையின்போது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இவர்கள் ஊடுறுவக் காத்துள்ளனர் என்றார்.
அதிபர் ஒபாமா நவம்பர் 6ம் தேதி மூன்று நாள் பயணமாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அதிபர் இந்தியாவுக்கு வரும்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை பாக். தீவிரவாதிகள் ஒரு வழக்கமாக மாற்றியுள்ளனர்.
கடந்த 2000மாவது ஆண்டு மார்ச் 19-20 ஆகிய நாட்களில் அப்போதைய அதிபர் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில், தெற்கு காஷ்மீரில் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத முஸ்ஸமில் தலைமையிலான தீவிரவாதிகள் 36 சீக்கியர்களை கொடூரமாக படுகொலை செய்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த முஸ்ஸமில் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 80 தீவிரவாதிகள் ஊடுறுவத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications