காந்தி நினைவிடத்திற்கு அரிய நினைவுப் பரிசை அளித்த ஒபாமா
டெல்லி: மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு இன்று விஜயம் செய்து தனது மானசீக குருக்களில் ஒருவரான காந்திக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அரிய நினைவுப் பரிசு ஒன்றையும் நினைவிடத்திற்கு அளித்தார்.
மார்ட்டின் லூதர் கிங் நினைவிடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கல்தான் அந்த நினைவுப் பரிசு. ஒபாமாவின் மானசீக குருக்கள் இருவர், ஒருவர் மார்ட்டின் லூதர் கிங், இன்னொருவர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் லூதர் கிங் பிறந்த பூமியிலிருந்து காந்தி பிறந்த பூமிக்கு வந்துள்ள ஒபாமா, காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு இன்று காலை வந்தபோது மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் நீண்ட நேரம் கண்களை மூடி, கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தார். பின்னர் ராஜ்காட் காந்தி சமாதி கமிட்டி செயலாளர் ரஜனீஷ் குமாரிடம் தனது நினைவுப் பரிசை அவர் அளித்தார்.
பின்னர் மகாத்மா காந்தி நினைவிடம் குறித்து ஒபாமா கூறுகையில், மிகவும் எளி்மையாக, அழகாக உள்ளது என்றார். உடன் இருந்த மிஷல் ஒபாமா, மிகவும் அழகாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து ஒபாமா கூறுகையில், உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள். அவர் போதித்த அமைதி, சகிப்புத்தன்மை, பிறர் மீது அன்பு காட்டுவது ஆகியவை மிக உயர்ந்த தத்துவங்கள். அவற்றைப் போதித்த அந்த ஆத்மாவை எப்போதும் நாங்கள் நினைவு கூருவோம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications