சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில் டாடாவின் புதிய தொழிற்சாலைகள்
டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில், புதிய தொழிற்சாலைத் திட்டங்களைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
டாடாவின் மலிவு விலை நானோ காரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் இந்த சிங்கூர் நிலம். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. ஆனால் அங்குள்ள விவசாயிகளின் எதிர்ப்பு, அவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு போன்ற காரணங்களால் சிங்கூர் நிலத்தில் நானோ தொழிற்சாலை திட்டத்தை டாடா கைவிட்டது. அந்த தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றிக் கொண்டது.
சிங்கூர் நிலத்தை டாடாவுக்கு ஒதுக்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் குழுக்கள், டாடா நிறுவனம் இந்த நிலத்தைப் பயன்படுத்தாத நிலையில் சும்மா வைத்திருக்கக் கூடாது என்றும், விவசாயிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. டாடா இந்த நிலத்தை பயன்படுத்தாவிட்டால், உடனே திருப்பித் தந்துவிட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசும் கூறியுள்ளது.
ஆனால் நானோவுக்காக கட்டப்பட்ட தொழிற்சாலை மற்றும் நிலப் பகுதியில் வேறு சில திட்டங்களைத் தொடங்கப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
சிங்கூர் நிலம் இன்னமும் தங்கள் வசமே உள்ளதாகவும், இதனை ஆண்டுக்கு ரூ 1 கோடி வாடகை என்ற அடிப்படையில் 90 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள டாடா மோட்டார்ஸ், இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்ததால் ரூ 500 கோடியை இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் வரும் மே 2011-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது டாடா மோட்டார்ஸின் வசமுள்ள சிங்கூர் நிலத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மற்ற அனைத்து வழக்குகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications