மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது தொட்டது
மேட்டூர்: இந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. இன்று காலை அது 100 அடியைத் தாண்டி விட்டது. தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ் சென்றது.
இந்நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது. கர்நாடக அரசும் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதையடுத்து தண்ணீர் திறந்துவிட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் நீர் வரத் துவங்கியது.
இதற்கிடையே டெல்டா பாசன பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், நீர்வரத்து அதிகரித்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்நதது.
கடந்த 8-ம் தேதி இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியைத் தாண்டியது. மழை குறைந்தபோதிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் இருந்தது.
நேற்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.36 அடியைத் தொட்டது. இரவில் 100 அடியை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 38,382 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி திறக்கப்படுகிறது.
இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தொட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications