3 ஆண்டுகளில் காங்கிரசை அடியோடு அழிப்பேன்: ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி அன்மையில் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இன்னும் 45 நாட்களில் புதிய கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். கட்சித் துவக்கப் பணிகளில் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
நேற்று ஹைதராபாத்தில் இளைஞர் காங்கிரஸார் ஆயிரக்கணக்கானோர் கூண்டோடு ஜெகன் பக்கம் சேர்ந்தனர். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நேற்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு ஜெகனுக்குத் தான் ஆந்திர காங்கிரஸில் செல்வாக்கு அதிகம். அவர் விலகியுள்ளதால் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது என்றார்.
இந்நிலையில் ஜெகன் நிருபர்களிடம் கூறியதாவது,
என் தந்தை ராஜசேகர ரெட்டி இறந்தபோது கட்சித் தொண்டர்கள் பலர் தீக்குளித்து இறந்தனர். அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல யாத்திரை துவங்கினேன். இதற்கு கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவிக்கவே என் யாத்திரையின் நோக்கத்தை எடுத்துக்கூற டெல்லி சென்றேன்.
ஆனால் எனக்கு சோனியா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊருக்கு திரும்பி என் யாத்திரையைத் தொடர்ந்தேன். அப்போது தான் எனக்கும், மேலிடத்துக்கும் பிரச்சனை ஆரம்பமானது.
இதையடுத்து என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற எனக்கு நெருக்கடி கொடுத்தனர். என் குடுபத்தைப் பிரிக்கப் பார்த்தனர். அவர்களுக்கு வேலை கொடுக்காமல் நானே கட்சியை விட்டு விலகிவிட்டேன். என் பலத்தையும் நிரூபித்து விட்டேன்.
நான் இன்னும் 45 நாட்களில் புதிய கட்சியை துவங்கவிருக்கிறேன். என் கட்சிக் கொடி ஆந்திராவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பறக்கும். இன்னும் 3 ஆண்டுகளில் ஆந்திராவில் இருந்து காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிப்பேன். இதி்ல் சந்தேகமே இல்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications