பாமக 50 தொகுதிகளில் ஜெயித்தே தீர வேண்டும்!-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramdoss
வந்தவாசி: கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.

தொகுதி பா.ம.க. இளைஞர்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் மருதாட்டி என்ற இடத்தில் நடந்தது. இதில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

வந்தவாசி தொகுதி பா.ம.க.வின் கோட்டை. வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனியாக நிற்கலாம். கூட்டணி அமைத்தும் போட்டியிடலாம். 50 தொகுதிகளில் நாம் போட்டியிட்டால் அனைத்திலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும்.

கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், கூட்டணி கட்சியை உயிரைக் கொடுத் தாவது வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்கு பா.ம.க. இளைஞர்கள் சிறப்பாக பாடுபட வேண்டும்.

கடந்த 63 ஆண்டுகளில் எத்தனையோ பேர் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை கூட வன்னியர் முதல்வர் ஆகவில்லை. தமிழ்நாட்டில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். 500 சாதிகள் இருக்கின்றன. இதில் வன்னியர்கள் 2.5 கோடி. எனவே வன்னியர் சமூகம் அரசியலில் முதல்வர் பதவியைப் பிடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடிகர்கள் இன்னும் எத்தனை கட்சிகளை தொடங்குவார்கள் என்று தெரியவில்லை. இதற்கு இளைஞர்கள் பலியாகக் கூடாது. ரசிகர் மன்றம் வைக்கக் கூடாது. மதுக் கடைகளுக்கும் செல்லக்கூடாது. இளைஞர்கள் இருக்க வேண்டிய கட்சி பா.ம.க.

தமிழ்நாடு சாராய உற்பத்தி யிலும், திரைப்பட தயாரிப்பிலும்தான் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி, பொருளா தாரத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு பா.ம.க. வெற்றி பெற வேண்டும். இளைஞர் கள் பா.ம.க.வில் அதிக அளவில் சேரவேண்டும். மற்ற கட்சியில் உள்ள இளைஞர்கள், இளம்பெண் களையும் பா.ம.க.வில் சேர்க்கவேண்டும். வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்...", என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+