மாடர்னாக இருந்ததற்காக மகளைக் கொன்ற ஈராக்கிய தந்தை

Subscribe to Oneindia Tamil

பீனிக்ஸ்: தனது 20 வயது மகள் மாடர்னாக இருப்பதாகக் குற்றம்சாட்டி அவளை கொலை செய்துள்ளார் ஈராக்கில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தந்தை ஒருவர். இந்த மாதம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஈராக்கில் இருந்து வந்து பீனிக்ஸில் குடியேறியவர் பாலே ஹசன் அல்மலேகி (50). இவரது மகள் நூர் அல்மலேகி (20). ஹசன் தனது மகள் மேற்கத்திய மோகம் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டி அவள் மீது ஜீப்பை ஏற்றி விட்டார். இச் சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது.

ஜீப் ஏறியதால் படுகாயம் அடைந்த நூர் 2 வார காலமாக கோமாவில் இருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த கௌரவக் கொலை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தில் இன்னொரு பெண்ணும் காயம் அடைந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் ஹசனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். இவ்வழக்கு விசாரணை வரும் 18-ம் தேதி துவங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+