கன்னியாகுமரி கப்பல் போக்குவரத்து ஊழியர்கள் 15ம் தேதி முதல் 3 நாள் ஸ்டிரைக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர்கள் வரும் பொங்கல் தினம் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பொங்கல் விடுமுறையின்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படவுள்ளது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்கச் செல்வதற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் படகு சேவையை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடத்தி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2007-ம் ஆண்டே முடிவடைந்து விட்டது. அதன்பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நிர்வாகம் பலமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இதனையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அண்ணா படகு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் போன்றவை புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி பொங்கல் பண்டிகையான வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
குமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. பொங்கல் தின விடுமுறையில் இது மேலும் பன்மடங்காக உயரும். பொங்கல் பண்டிகையையொட்டி படகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications