சட்டமேலவை தொகுதி மறுவரையறை குறித்த அறிவிக்கை-செல்லுமா என்று உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: தமிழகத்தில் சட்டமேலவை தொகுதி மறு வரையறை குறித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த அறிவிக்கை செல்லுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மற்றும் பாரதியார் என்பவர் முதலில் சென்னை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அறிவிக்கை சட்டப்பூர்வமானது, செல்லுபடியாகக் கூடியது என்று கூறி அதை ரத்து செய்ய மறுத்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகினர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ஜே.எம்.பன்சால், எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், மறுவரயைற தொடர்பாக மாநில அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
