பிரதமர் கொடும்பாவியை சுடுகாட்டில் எரிக்கும் போராட்டத்திற்குப் போலீஸ் தடை
அறந்தாங்கி: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பிரதமரின் கொடும்பாவியை சுடுகாட்டில் எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று பிற்பகல் நூதன போராட்டம் நடத்தவிருக்கின்றனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிவர்மன் தலைமையில் நடக்கவிருக்கும் இதில் பிரதமர் மன்மோகன் சிங்கின் கொடும்பாவியை பாடையில் வைத்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டுக்கோட்டை சாலையில் இருக்கும் சுடுகாட்டில் எரிக்கவிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த தடை வந்தாலும் அவற்றைத் தாண்டி இன்று பிற்பகல் போராட்டம் அறிவித்தபடி நடக்கும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அறந்தாங்கியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications