இலங்கையில் அரசுக்கு எதிரான இணையதள அலுவலகத்திற்கு தீவைப்பு: 10 ஆண்டுகளில் 17 பத்திரிக்கையாளர்கள் கொலை
கொழும்பு: பிரபல இலங்கை செய்தி இணையதள நிறுவனமான லங்கா நியூஸின் அலுவலகத்திற்கு இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இது குறித்து லங்காஇநியூஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு மணி நேரத்திற்கு முன் லங்காஇநியூஸ் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்துள்ளனர்.
இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி அதிகாலை 3. 25 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின் யார் உள்ளனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த செய்தி இணையதளத்தில் பணியாற்றி வந்த பத்திரிக்கையாளரும், அரசியல் கார்டூனிஸ்டுமான பிரகீத் ஏக்னலிகோடா கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திடீர் என்று காணாமல் போனார்.
இந்த இணையதளம் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளது. இதில் கடந்த வாரம், ஒரு வருடமாக மாயமான பிரகீத் சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை அரசு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் 17 பத்திரிக்கையாளர்களும், மீடியாவில் பணியாற்றியவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக மீடியா உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications