ஒவ்வொரு தொண்டரும் 10 வாக்காளர்களை பூத்துக்கு கொண்டு வர வேண்டும்! - ஜெ கட்டளை
சென்னை: ஒவ்வொரு அதிமுக தொண்டரும் குறைந்தபட்சம் 10 வாக்காளர்களையாவது வாக்குச் சாவடிக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா.
நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தொண்டர்கள், மாணவ மாணவியர்கள் 7 சட்டக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 ஆயிரம் பேர் நேற்று மாலை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியது:
"இன்று கழகத்தில் இணைய வந்துள்ள உங்களை கண்டு உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அ.தி.மு.க. பொது செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்று தமிழ்நாடு தி.மு.க. ஆட்சியில் தவித்துக் கொண்டு இருக்கிறது. இருளில் மூழ்கி கிடக்கிறது. தமிழ்நாட்டை அவர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது.
உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் உங்களில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 10 பேரையாவது வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க செய்ய வேண்டும்.
இந்த ஆட்சியை அகற்ற நீங்கள் உதவ வேண்டும். உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நீங்கள் எத்தகைய நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. உங்களுக்கெல்லாம் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications