தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும்-வைகோ
களியக்காவிளை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
களியக்காவிளையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நதிகளில் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 5 மாவட்ட மக்கள் பயன் பெறும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகம் தவிப்புக்குள்ளாகி உள்ளது.
ஈழத்தில் இன படுகொலை இதயத்தில் ரத்தம் என்ற குறுந் தகட்டை வெளியிட்டு உள்ளோம். இதை இளைஞர்கள் பொதுமக்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், போர்த்துக்கீசியம் என பல மொழிகளில் பிரதிகள் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்துக்கு சென்று வந்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டபோது இந்திய பிரதமரிடம் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினேன். இதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி யார், யாரிடம் சென்றது என்பதை கூற ராசா மறுப்பதால் அவருக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ. காவல் நீடித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நெஞ்சை பதற வைக்கும் படுகொலைகள் நடந்துள்ளன. உடமைகள் சொத்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலை விரைவில் மாறும். அதிமுக-மதிமுக கூட்டணி வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். மீண்டும் புரட்சித் தலைவியின் தலைமையில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றார் வைகோ.
ஆட்சியில் பங்கு தந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ள நிலையில், வைகோவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications