நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல், வகுப்பு புறக்கணிப்பு!
நெல்லை: மாணவர் மீது பேருந்து நடத்துநர் பொய்புகார் கொடுத்து கைது செய்ததைக் கண்டித்து நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவரை விடுவிக்கக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள், பஸ் மறியலிலும் ஈடுபட்டனர்.
சங்கரன் கோயில் வழித்தடத்தில் வரும் அரசுப் பேருந்து தொடர்ந்து இரு தினங்கள் கல்லூரி நேரத்தில் பிரேக் டவுனாகிவிட்டதாம். இதனை சட்டக்கல்லூரி முதலாண்டு மாணவர் சுகுமார் எதிர்த்துக் கேட்டுள்ளார். இதில் நடத்துநருக்கும் மாணவருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்துள்ளது.
சங்கரன்கோயில் காவல் நிலையத்துக்கு அருகிலேயே இந்த தகராறு நடந்ததால், உடனடியாக பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி, மாணவர் மீது புகார் கொடுத்தார் நடத்துநர்.
பேருந்தின் கண்ணாடிகளை மாணவர் சுகுமார் உடைத்து சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்தார் நடத்துநர். இதன் பேரில் சுகுமார் கைது செய்யப்பட்டு, எப்ஐஆரும் போடப்பட்டுவிட்டது.
விஷயத்தைக் கேள்விப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வகுப்புகளைப் புறக்கணித்தனர். சுகுமாரை விடுவிக்கக் கோரியும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரியும் பஸ் மறியல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இருதரப்பிலும் சமரசப் பேச்சு நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications