இளங்கோவன் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்: தீக்குளிக்க முயற்சி, சத்தியமூர்த்தி பவன் மூடல்

சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோருக்கு இடம் தரப்பட்டது.
ஆனால், இளங்கோவனுக்கு இடம் தரப்படவில்லை. அதிமுக ஆதரவாளரான அவரைச் சேர்த்தால் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை குலைத்துவிடுவார் என்று கருதியே அவரை காங்கிரஸ் தலைமை ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.
இதனால் இளங்கோவன் தரப்பு கடுப்பாகியுள்ளது. தனது எதிர்ப்பை தலைமையிடம் நேரி்ல் காட்ட முடியாத நிலையில் அவர் உள்ளார்.
இதையடுத்து தனது ஆதரவாளர்கள் மூலம் போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்.
முதல்கட்டமாக இன்று அவரது ஆதரவாளர்கள் இன்று சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருப்பதற்காக வந்தனர். அப்போது கேட்டை நிர்வாகிகள் பூட்டிவிட்டதால் உளளே நுழைய முடியவில்லை.
இதையடுத்து சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்த அவர்கள் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி,ராணிவெங்கடேசன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
அப்போது இளங்கோவனின் தீவிர ஆதரவாளர் என்று கூறிக் கொண்ட ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். தயாராக இருந்த மற்றவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே சத்யமூர்த்தி பவன் கேட் பூட்டை உடைக்கவும் அவரது ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.
எங்கள் தலைவரை குழுவில் சேர்க்கும் வரை போராட்டம் ஓயாது என்று ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் சத்யமூர்த்தி பவனில் பெரும் பதற்றம் நிலவியது.
கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு:
இந்தப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, காங்கிரஸ் அமைத்துள்ள குழு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலின், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications