திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு குழுக்கள் இன்று பேச்சுவார்த்தை
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் இடப் பங்கீடு குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
திமுக குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்த இரு குழுவினர் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
முன்னதாக காங்கிரஸ் குழுவினர் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் பல நாட்கள் ஆலோசனை நடத்தினர்.
அதில் பேசிய பெருமபாலோனார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் திட்டப்படி, திமுகவிடம் 90 இடங்களைக் கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கு கோர வேண்டும் என்றனர். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை இந்தக் குழு சந்தித்து தங்களது கட்சியினரின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரசுக்கு அதிகபட்சமாக 60 இடங்கள் வரை தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் இரு குழுக்களும் சந்தித்து முதல் முறையாக பேச்சு நடத்துகின்றன.
மாலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதையடுத்து சோனியா காந்தி-கருணாநிதியின் ஒப்புதலுடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழகம் வந்து முதல்வருடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications