ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்-திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!-வைகோ
மதுரை: ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணை போன திமுகவுக்கும் வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதுரையில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமணத்தில் அவர் பேசுகையி்ல், அதிமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருகிறது. இதில், மதிமுகவுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றெல்லாம் எங்கள் கட்சியினர் கேட்பதில்லை. தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்கும் கட்சி மதிமுக. உண்மையான திமுக என்பது மதிமுகதான் என்பதை காலம் நிரூபிக்கும்.
ஈழத்தில் தமிழனத்துக்கு துரோகம் செய்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணை போன திமுகவுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வரும் தேர்தலில் பண நாயகம் கட்டுப்படுத்தப்பட்டு, ஜனநாயகம் வெல்லும், நிரந்தர விடியல் நிச்சயம் உண்டு. நம்பிக்கையோடு நாம் கடமையாற்றுவோம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாகச் செய்திகள் வந்துள்ளன. கூட்டணியில் தொடர காங்கிரசுஸ் விரும்பவில்லை என்று தெரிவதாக கருணாநிதி வெளியிடும் கருத்து மூலம் தெரிகிறது. இதுகுறித்து திட்டவட்டமாக முடிவுகள் வெளியான பின்புதான் கருத்துக் கூற முடியும் என்றார் வைகோ.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications