16ல் சரத்குமாருக்கு பாராட்டு விழா: நாடார் சங்கங்கள் பேரவை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வரும் 16-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் பாராட்டு விழா நடத்துவது என்று நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.

நெல்லை ஜங்ஷனில் அனைத்து நாடார் சங்கங்களின் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மகளிரணி செயலாளர் சுபலதா, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், செல்வராஜ், வைத்தியலிங்கம், சவுந்திரபாண்டியன் உள்பட பலர் பேசினர்.

அதிமுக கூட்டணியில் நாடார் சமுதாயத்திற்கு 2 இடங்கள் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது, வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தென்மாவட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும், பாளை நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 16-ம் தேதி சரத்குமாருக்கு பாராட்டு விழா நடத்துவதும், அதில் நாடார் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொள்வதும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+