தொலைபேசி உரையாடல் வெளியான வழக்கு: மாஜி தலைமை செயலர் திரிபாதி சாட்சியம்
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டு பத்திரிக்கையில் வெளியான வழக்கில் நேற்று திரிபாதி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு, தலைமைச் செயலாளராக இருந்த எல்.கே.திரிபாதியும், உபாத்யாயாவும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்ச ஊழல் வழக்குகள் தொடர்பாக உபாத்யாயாவிடம் அதில் பேசியிருந்தார் திரிபாதி. இதை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது.
இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக ஊழியர் சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. வழக்கை நீதிபதி சாவித்தி்ரி விசாரிக்கிறார். தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது. நேற்று அரசுதரப்பு சாட்சியாக திரிபாதி விசாரிக்கப்பட்டார்.
தொலைபேசி உரையாடலை பதிவு செய்யும் தொழில்நுட்ப வசதி தனது அலுவலகத்தில் இல்லை என்று அவர் தெரிவித்தார். தான் இந்த வழக்கிற்காக ஒரிசாவில் இருந்து வந்துள்ளதால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்க சங்கரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மறுத்துவிட்டார். அவரிடம் பல கேள்விகள் கேட்க வேண்டியிருப்பதால் குறுக்கு விசராணையை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து குறுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications