கை சின்னத்தில் மட்டும் வாக்களிக்காதீங்க: சீமான்

தமிழினம் அழிக்கப்பட்டதற்கு துணையாய் இருந்த காங்கிரஸை எதிர்தது நாம் தமிழர் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
வரும் சட்டசபை தேர்தல் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழினத்தை அழிப்பதற்கு துணைபோன காங்கிரஸை அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அக்கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 28-ம் தேதி மதுரை வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் பிரசார கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோத போக்கை மக்களுக்கு விளக்கிக் கூறினார்.
2ஜி அலைக்கற்றை ஊழல்,காமன்வெல்த் ஊழல்,ஆதர்ஷ் ஊழல் என இந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களையும், மக்கள் படும் சிரமங்களையும் எடுத்துக் கூறி காங்கிரசின் “கை" சின்னத்தில் மட்டும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கோட்டை குமார், வழக்கறிஞர் தடா.சந்திரசேகர், பேராசிரியர் அறிவரசன் அய்யா, அரப்பா தமிழன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், தலைமை கழக பேச்சாளர்கள் புதுகோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன், இயக்குனர் செல்வ பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.












Click it and Unblock the Notifications