எம்.ஜி.ஆர். சிலை திறக்கக்கோரி ஜெ. வீட்டுக்கு முன் விரலை வெட்டிய அதிமுக நிர்வாகி
சென்னை: காஞ்சிபுரத்தில் மூடப்பட்டு கிடக்கும் எம்.ஜி.ஆர். சிலையைத் திறக்கக்கோரி ஜெயலலிதா வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் தன்து கை விரலை வெட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் புல்லட் பரிமளம் (45). தற்போது ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக இருக்கிறார். அவர் நேற்று மதியம் 12 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு முன்பு காரில் வந்திறங்கினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மூடியே கிடக்கிறது. அதை உடனடியாக திறக்க வேண்டும். இதை பற்றிய யாருமே ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை என்று சத்தமாகக் கூறினார். பேசிக் கொண்டிருக்கையிலேயே தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இடது கை விரலை வெட்டினார்.
இதில் அவரது விரலில் ஆழமான வெட்டுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர் வந்த காரிலேயே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறி்த்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications