சாராயக் கடை திறக்கவில்லை கல்லூரி தான் திறந்துள்ளேன்- பீட்டர் அல்போன்ஸ்
கடையநல்லூர்: நான் மக்களை அழிக்கும் சாராயக் கடையை திறக்கவில்லை கல்வி நலனுக்காக கல்லூரி தான் திறந்துள்ளேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் களம் உச்சக்கட்டமாக காணப்பட்டு வரும் நிலையில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் ஆய்க்குடி டவுன் பஞ்., பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அனந்தபுரம், அகரக்கட்டு, ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:
ஆய்க்குடி டவுன் பஞ்., பகுதியில் மட்டும் கடந்த ஆட்சி காலத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுதாய நலக்கூடம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் ஆய்க்குடியில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பணிகள் எல்லாம் எந்தவிதத்திலும் தடைபட்டு விடக்கூடாது. மக்கள் பயன்பாட்டிற்காக அது தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்காக காங்.,கட்சிக்கு உங்கள் ஆதரவினை தாருங்கள்.எதிரணியினர் வேண்டுமென்றே பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நான் ஒன்றும் ஆய்க்குடி பகுதியில் சாராயக் கடையை திறக்கவில்லை.
கல்வியை மேம்படுத்தும் வகையில் கல்லூரி தான் திறந்துள்ளேன். இனிவரும் காலங்களில் உலகத்தில் எந்த முதலீடு தேவையோ அந்த முக்கிய முதலீடான கல்வியை தான் இந்த பகுதியில் கொண்டு வந்துள்ளேன்.இன்னும் 50 ஆண்டு காலம் கழித்தாலும் உங்களது குழந்தைகள் அவர்களது குழந்தைகள் படிப்பதற்கு
இந்த கல்லூரி ஏதுவாக இருக்கும். கிராம மக்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு தான் ஆய்குடியில் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களது மேலான ஆதரவினை எனக்கு மீண்டும் தாருங்கள்'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications