தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி புகார்-நெடுமாறன் கண்டனம்
புதுக்கோட்டை: தேர்தல் ஆணையைத்தை முதல்வர் கருணாநிதி குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் எந்த விதமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையம் தான். ஆனால், தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை குறை கூறி வருகிறார். அதே நேரததில் ஆணையத்தை
மக்களும் எதிர்க்கட்சிகளும் பாராட்டுகின்றன.
இதனால் தேர்தல் ஆணையைத்தை கருணாநிதி குறை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமங்கலத்தை போல தில்லுமுல்லு செய்யமுடியாததாலும் முறைகேடுகள் செய்ய முடியாததாலும் தான் குறை கூறி வருகிறார்.
மே 13ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் கலைஞர் குறை கூறியுள்ளார். இந்த ஒரு மாத கால இடைவெளியில் அரசு நிர்வாகம் ஸ்தபித்துவிட்டது என்றும் சொல்கிறார். இது தவறான குற்றச்சாட்டு.
பல முறை முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதது அல்ல. ஊழல், முறைகேடுகளை மறைக்க தேர்தல் ஆணையைம் தடையாக இருக்கிறது என்பதால்தான் குற்றம் கூறிக்கொண்டிருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications