For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கந்தஹார் சிறையில் இருந்து 476 தாலிபான்கள் தப்பியோட்டம்

By Siva
Google Oneindia Tamil News

காபுல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் சிறையில் இருந்து நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளமுடைய சுரங்கப் பாதை வழியாக 476 தாலிபான் கைதிகள் தப்பியோடிவிட்டனர் என்று அதிகாரிகள் தெரவித்தனர்.

இது குறித்து சிறை தலைவர் ஜெனரல் குலாம் தஸ்தகீர் மாயார் கூறியதாவது,

சிறையின் தென்பகுதியில் இருந்து சிறை நோக்கி நூற்றுக்கணக்கான மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை தோண்டப்பட்டுள்ளது. அதன் வழியாக 476 அரசியல் கைதிகள் நேற்றிரவு தப்பியுள்ளனர் என்றார்.

நேற்றிரவு சில அரசியல் கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டனர் என்று கந்தஹாரின் தலைமை போலீஸ் அதிகாரி ஷைர் ஷா யூசுப்சாய் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு இஸ்லாம் போராளிகள் தான் காரணம் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அகமதி தெரிவித்தார். சிறைக் கைதிகள் 360 மீட்டர் நீளமான சுரஙகப் பாதையை தோண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
476 political prisoners have escaped through a 360 metre long tunnel from Kandahar prison in Afghanistan last night. The acting police chief of Kandahar Shair Shah Yousufzai has confirmed this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X