படிவம் 20ல் வாக்குகள் பதிவாவதை முகவர்கள் கண்காணிக்க அனுமதி கோரும் ஜெ.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சிவங்கங்கை தொகுதியில் வாக்குகளின் எண்ணிக்கை, படிவம் 20ல் பதிவு செய்யும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.
அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்துக்கும், ப. சிதம்பரம் பெற்ற வாக்குகள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெயரிலும் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் மற்றும் முகவர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை தகவல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் 31வது பிரிவில் வாக்கு எண்ணிக்கை மாற்றி பதிவு செய்யப்பட்ட விவரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு ஆதரவாக இவ்வாறு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை விவரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சரிபார்த்த பின்னரே இறுதி தேர்தல் முடிவை வெளியிட வேண்டும்.
மேலும், படிவம் 20ல் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை தகவல்களை கண்காணிக்க தலா ஒரு முகவரை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications