8 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்-2 டிஐஜிக்களும் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் இடமாற்றங்கள் தொடருகின்றன. 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்களை அரசு நியமித்துள்ளது.அதேபோல நெல்லை, விழுப்புரம் சரக டிஐஜிக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
- மாநில உளவுப்பிரிவு விசேஷ பிரிவு எஸ்.பி. நரேந்திரன் நாயர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாகியுள்ளார்.
- கடலூர் எஸ்.பியாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சம்பத்குமார், வேலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- கோவை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் உமா, கோவை புறநகர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. கணேசமூர்த்தி, தர்மபுரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருண், கன்னியாகுமரி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தலைமையக நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி.யாக உள்ள சாமூண்டீஸ்வரி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். தற்போது அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் மதுரை புறநகர் எஸ்.பியாக கார்க் மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டு புதிய டிஐஜிக்கள்
- இதுவரை காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த எம்.ராமசுப்பிரமணி, நெல்லை சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- அதேபோல மத்திய அரசு பணியில் தற்போது உள்ள வினித்தேவ் வான்கடே, விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications