கழகத்திற்காக திறம்பட செயலாற்றிய ஆற்றல் படைத்த செயல்வீரர் மரியம் பிச்சை-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் வளர்ச்சிக்காக திறம்பட செயலாற்றிய ஆற்றல் படைத்த செயல் வீரர் அமைச்சர் மரியம் பிச்சை என்று முதல்வர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை இன்று காலை நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர் மரியம் பிச்சை அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ஆரம்பம் முதல் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் மரியம் பிச்சை. பொன்மலை கழக செயலாளராகவும், 3 முறை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய, ஆற்றல் படைத்த கழக செயல்வீரர்.

அவரது மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+