ராம்தேவ் வெளியேற்றத்தில் மனித உரிமை மீறல்-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய உள்துறை செயலாளர், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்தேவ் வெளியேற்றப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து இன்று விசாரித்தது. அதன் பின்னர் இந்த நோட்டீஸைப் பிறப்பிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர், டெல்லி போலீஸாரின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சி தருவதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறல் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
தங்களது உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு நீதிபதிகள் கூறுகையில், போலீஸாரின் மிருகத்தனமான நடவடிக்கையை டிவியில் பார்த்து நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். நள்ளிரவு 1.30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை விரட்டியடிக்க வேண்டிய அவசியம் என்ன?. அப்படி என்ன கட்டாயம் வந்தது காவல்துறைக்கு என்று நீதிபதிகள் கேட்டனர்.
முன்னதாக ராம்தேவ் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து அஜய் அகர்வால் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். இருப்பினும் இந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்து டிஸ்மிஸ் செய்து விட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications