ஜெயலலிதாவைப் பாராட்டி சென்னையில் ஜூன் 18ல் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம்

சென்னையில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், கட்சி அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சீமான், மணிவண்ணன், சத்யராஜ் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது சீமான் பேசுகையில்,
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications