சொத்து வரி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தது உயர்நீதிமன்றம்

முன்பு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது 1993-94ம் ஆண்டில் சொத்து வரியை அவர் கணக்கில் காட்டவில்லை என்று கூறி 1996ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சொத்து வரி உதவி ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா மனு தாகக்கல் செய்தார். அதை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். அதில்,
1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்பிய உதவி ஆணையர், பல்வேறு விவரங்களில் மனதை செலுத்தவில்லை. என்மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்கியதில் உள்நோக்கம் உள்ளது.
எனவே என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை ஏற்று, சொத்து வரி வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications