நெல்லை பாஸ்போர்ட் சேவை மையம் இன்று துவக்கம்-16 கவுன்டர்கள் அமைப்பு
நெல்லை: நெல்லையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் இன்று (30ம் தேதி) முதல் செயல்பட தொடங்குகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் இன்று முதல் செயல்படத் துவங்குகிறது. இந்த சேவை மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் கேட்பவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்வது முதல் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் பொறுப்பு ஹெச்சிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது சான்றிதழ்கள், முகவரி ஆதாரச் சான்று ஆகியவறறுடன் சேவை மையத்துக்கு சென்றால் போதும். விண்ணப்பம் செய்பவர்களின் வசதிக்காக 16 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் ஊழியர்களே விண்ணப்பம் பூர்த்தி செய்வது, போட்டோ எடுப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர். பாஸ்போர்டுக்கான தொகை ரூ.1000-த்தை ரொக்கமாக நேரடியாக செலுத்தலாம். சான்றிதழ்களின் நகல்கள் எதையும் கொண்டு செல்லத் தேவையில்லை. அனைத்து சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு திருப்பித் தரப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் டோக்கன் தரப்படும். அதன்பின்னர் அவர்கள் விண்ணப்பம் சரி பார்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல், கிழிந்த, தொலைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மறு பாஸ்போர்ட், மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் நெல்லை சேவை மையத்திலும் பெறலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications