செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து இன்று முதல் 2 வாரந்திர சிறப்பு ரயி்ல்கள்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து 16ம் தேதி முதல் 2 வாரந்திர சிறப்பு ரயி்ல்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் பொதிகை ரயிலில் ஆண்டு முழுவதும் கூட்டம் அலை மோதுவதால் கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னக ரயில்வே வரும் 17ம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 2 வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஒரு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து விருத்தாசலம், திருச்சி வழியாக செங்கோட்டை வருகிறது. இன்று 17ம் தேதி சனிக்கிழமை துவங்கும் இந்த சிறப்பு ரயில் வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை எழும்பூரில் இரவு 8.20க்கு புறப்படும் இந்த ரயில் ஞாயிற்றுகிழமை காலை 10.15 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். அதுபோல ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மதியம் 2.25க்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் திங்கள்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 1 முதல் வகுப்பு, 1 ஏசி 3 அடுக்கும், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டியும் 4 பொது வகுப்பு பெட்டியும் இருக்கும். இந்த ரயில் தம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர் திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

அதுபோல மற்றொரு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.

வரும் 18ம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு 10.45க்கு சென்னை எழும்புரிலிரு்ந்து கிளம்பும் இந்த ரயில் செவ்வாய் கிழமை மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. அது போல ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மாலை 6 மணிக்கு செங்கோட்டையில் கிளம்பும் இந்த ரயில் புதன்கிழமை காலை 7.15 மணிக்கு சென்னையை சென்றடையும்.

இந்த ரயிலில் 1 முதல் வகுப்பும், 1 ஏசி 3 அடுக்கு பெட்டியும், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டியும், 4 பொது பெட்டியும் இருக்கும். இந்த ரயில் தம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாடி புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த ரயில் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை இயங்கும்.

இரண்டு சிறப்பு ரயில்களும் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும்போது மட்டும் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களால் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+