ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,732 கோடி வழங்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதுடன் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்காக, உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம், பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் இந்த தகவலை வெளியிட்டார்.
ரூ.1,200 கோடி நிதி உதவியுடன், மிக முக்கிய பிரமுகர்களுக்கான விமானங்களை இயக்குவதற்கும், அரசுக்காக மீட்பு விமானங்களை இயக்குவதற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.532 கோடி ஒதுக்கவும் இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதில் ஏர் இந்தியாவுக்கு அரசு தர வேண்டிய பாக்கியே 1200 கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மீண்டும் இந்தக் குழு அடுத்த வாரம் கூடுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications