எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி
பெங்களூர்: சுரங்க ஊழல் புகாருக்குள்ளாகியுள்ள எதியூரப்பா மீதான புகார்களை விசாரிக்குமாறு கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு அம்மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி அளித்துள்ளார்.
மேலும் எதியூரப்பா மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுரங்க ஊழல் குறித்த லோக் ஆயுக்தாவின் அறிக்கையை முழுமையாகப் பரிசீலித்த ஆளுநர் பரத்வாஜ், அதில் கோரியுள்ளபடி எதியூரப்பாவுக்கு எதிரான விசாரணை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ராஜ்பவன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்த அறிக்கையை வெளியிட்ட லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அதன் பிரதியை மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
புதிதாக பதவியேற்றுள்ள லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல், விரைவில் எதியூரப்பா மீதான நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications