பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்த பெண் இந்தியாவிடம் ஒப்படைப்பு
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து விட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைப் பாதுகாப்ுப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள எல்லைப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் வசிக்கும் மக்கள், தெரியாமல் அவ்வப்போது நாட்டு எல்லையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்த பாவான் அக்தர் என்ற பெண், கடந்த 19ம் தேதி கோட்டரியனில் உள்ள இரு நாட்டு எல்லை பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பாத அப்பெண்ணை குறித்து, புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் எல்லையான சாகன்-டா-பாக் என்ற பகுதியில், இப்பெண் உள்ளதாக தகவல் கிடைத்தது. அப்பெண்ணை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். நீண்ட நாட்களுக்கு காணாமல் தவித்த அப்பெண்ணின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications