ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனு நிராகரிப்பு ஏமாற்றமளிக்கிறது-சீமான்
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியி்டுள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999 ம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000 வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.
இந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.
தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்?
வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும்.
மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாகாதா?
தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொறுங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.
இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது.
தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.
அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும்.
அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications