கூடன்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையம் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
அதையும் மீறி கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டன.
போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலந்தாய்வு கூட்டம் நடத்தலாம் என்றனர். கலந்தாய்வு கூட்டத்திற்கு சம்மதித்த பொதுமக்கள், தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அணுமின்நிலைய அதிகாரிகள் எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த சம்பவத்தால், நெல்லை எஸ்.பி.விஜயேந்திர பிதரி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications