முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை: மதுரையில் நாளை வைகோ உண்ணாவிரதம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டக் கோரியும், கேரள மாநிலத்தைக் கண்டித்தும் நாளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
முல்லை பெரியாறு அணையில் தமிழக உரிமைக்கு கேடு செய்யும் கேரள அரசையும், துரோகம் இழைக்கும் மத்திய அரசையும் கண்டித்து மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
மதுரை காளவாசல் சந்திப்பில் நாளை காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்குகிறது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார். முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ் முன்னிலை வகிக்கிறார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார். உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ம.தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications