ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு கோர காங்கிரஸ், திமுக அல்ல-சிங்வி
டெல்லி: ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு கோர காங்கிரஸ் ஒன்றும் திமுக அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு கருணை காட்டுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி 2 முறை கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒரு வேளை ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற நிலையில் மன்னிப்போம், மறப்போம் என்ற அடிப்படையில் கருணை காட்டியிருப்பார் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது (மூவரைத் தூக்கிலிடுவது) முற்றிலும், அரசியல் சாசன, சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடைமுறை. இதில் காங்கிரஸுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை. எனவே இதுகுறித்து நாங்கள் நிச்சயம் கருத்து தெரிவிக்க மாட்டோம் என்றார்.
கருணாநிதியின் கோரிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காங்கிரஸ் ஒன்றும் திமுக அல்ல என்றார்.
மரண தண்டனையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications