மனைவி புகார்: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டு கைது
வடக்கன்குளம்: நெல்லை அருகே அடுத்தவர் மனைவியுடன் குடும்பம் நடத்திய காவலர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்
பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை பயன்படுத்தி வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் பணம் வாங்கிய யாருக்கும் இசக்கியம்மாள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணகுடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இசக்கியம்மாள் பணகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட வரும் போது அங்கு பணியாற்றிய ஏட்டு கண்ணனுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து ஏட்டு கண்ணனும், இசக்கியம்மாளும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இது குறித்து கண்ணனின் மனைவி கற்பகம் நெல்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கண்ணன் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் இசக்கியம்மாளுடனான கள்ளத்தொடர்பை கண்ணன் விடவில்லை.
இந்நிலையில் இசக்கியம்மாள் வீட்டில் கண்ணன் இருந்த போது கற்பகம் தமது மகள்களுடன் சென்று கணவனை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் கற்பகத்தை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கற்பகம் தனது மகள்கள் ரேணுகாதேவி, அனுசுயா ஆகியோருடன் சென்று பணகுடி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து சம்பவத்தன்று வடக்கன்குளத்தில் இசக்கியம்மாள் வீட்டில் தங்கியிருந்த ஏட்டு கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications