துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களைச் சந்திக்க ஜான் பாண்டியனுக்கு அனுமதி மறுப்பு
தூத்துக்குடி: பரமக்குடியில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இவரை நேற்று போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்தே பரமக்குடியிலும், மதுரையிலும் வன்முறை மூண்டது. இதில் பரமக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் தென் மாவட்ட தலித் மக்கள் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். தலித் என்பதால் போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியதாக அவர்கள் குமுறுகின்றனர்.
இந்த நிலையில், இந்நிலையில் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற தனக்கு அனுமதி தர வேண்டும் என்று ஜான்பாண்டியன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பரமக்குடி பகுதியில் மேலும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
நேற்று கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் தூத்துக்குடி, வல்லநாடு பகுதியில் உள்ள போலீஸ் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைய வளாகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் எரிப்பு
இதற்கிடையே, ஜான் பாண்டியன் கைதைக் கண்டித்து தொடர்ந்து இன்றும் பலஇடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்துநிலையத்தில் இன்று ஒரு நகரப்பேருந்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இதுபோல், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் அரசு பஸ்கள் சேதமடைந்தன. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கல்வீச்சு சம்பவங்களில் 4 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications