அரக்கோணம் மருத்துவமனையில் விஜயகாந்த்: காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்: சென்னை அரக்கோணம் அருகே ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்து அரக்கோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 66 பேரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையம் அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இவர்களில் 66 பேர் அரக்கோணம் மருத்துவமனையிலும், எஞ்சியுள்ளவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குக் காரணமான மேல்மருவத்தூர்-வேலூர் ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரக்கோணம் மருத்துவமனையில் உள்ள 66 பேரை தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+