தயா பொறியியல் கல்லூரி விவகாரம்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனு தள்ளுபடி
மதுரை: தயா பொறியியல் கல்லூரி கட்ட விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற உள்ளதை அடுத்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை அருகே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்திற்கு சொந்தமாக தயா பொறியியல் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி பாசனக்குளம் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து மதகுகளை சேதப்படுத்தியதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் மதுரை கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகார் குறித்து மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மதுரை கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நில ஆக்கிரமிப்பு புகார் கூறப்பட்டுள்ளது என்று அழகிரி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி அழகிரி தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசு தரப்பில் கலெக்டர் நோட்டீசை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு புகார் குறித்து விளக்கம் கேட்டு சட்டத்துக்குட்பட்டு புதிதாக நோட்டீஸ் அனுப்ப கலெக்டருக்கு உரிமை உண்டு. நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிதாக நோட்டீஸ் அனுப்ப கலெக்டருக்கு உரிமை உள்ளது. இந்த நோட்டீசை மனுதாரர் சட்டப்படி எதிர்கொள்ளலாம் எனறு கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications