மணல் அள்ளும் பிரச்சினை தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கரூரில் கைது

கரூரில் வைத்து பழனிச்சாமியை போலீஸார் கைது செய்தனர். திமுகவின் மிகப் பெரிய புள்ளிகளில் பழனிச்சாமியும் ஒருவர். கேசிபி என திமுகவினரால் அழைக்கப்படும் பழனிச்சாமி, மிகப் பெரிய கோடீஸ்வரர், திமுகவின் முக்கியஸ்தர்களில் ஒருவர். கரூர் ஜாம்பவானான இவர் ஏற்கனவே எம்.பியாக இருந்துள்ளார்.தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று திடீரென கேசிபி கைது செய்யப்பட்டார். கரூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டாரப். காவிரியில் மணல் அள்ளும் பிரச்சினை தொடர்பாக கேசிபி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து கட்டளை கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கேசி பழனிச்சாமி தரப்பு காவிரியில் பல இடங்களில் மணல் அள்ளி வந்தது. இதன் மூலம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கோடி அளவுக்கு லாபமடைந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீஸார் மாயனூரில் வைத்து கேசிபியை கைது செய்து அங்குள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
பொய் வழக்கு
இதற்கிடையே, இந்த வழக்கு குறித்து கைது செய்யப்பட்ட கேசிபி கூறுகையில், இது பொய் வழக்கு. என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறினார்.
கேசிபியின் மணல்குவாரியில் பணியாற்றி வரும் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 பிரிவுகளில் வழக்கு-15 நாள் சிறை
கைது செய்யப்பட்டுள்ள கேசி பழனிச்சாமி மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கேசி பழனிச்சாமி பின்னர் குளித்தலை கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறைக் காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கே.என்.நேரு மீது 4-வது நில மோசடி வழக்கு பதிவு:
இந் நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு 4வது நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கே.என்.நேருவுடன் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் கோட்டப்பட்டு சண்முகம் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications