பிளஸ் 2 தனித்தேர்வில் காப்பி: பிட் அடித்து சிக்கிய சிக்கிய 2 தலைமை ஆசிரியர்கள்
விருத்தாசலம்: பிளஸ் 2 தனித்தேர்வில் காப்பியடித்த 2 தலைமை ஆசிரியர்கள் உட்பட 7 பேரை பறக்கும் படை கையும், களவுமாகப் பிடித்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 தனித்தேர்வுகள் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலத்தில் உள்ள புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் 136 பேர் தனித்தேர்வு எழுதினர். இங்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தேர்வு எழுதினர்.
அனைவரும் ஆர்வமாக தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில் தேர்வு மையத்திற்கு திடீர் என்று பறக்கும்படையினர் வந்தனர். அப்போது காப்பியடித்துக் கொண்டிருந்த 5 மாணவர்கள் சிக்கினர்.
இதே போன்று காப்பியடித்த வேப்பூர் கிழக்கு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், வடபாதி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் ஆகியோரும் பிடிபட்டனர். இதையடுத்து பறக்கும்படையினர் அந்த இருவரையும் தட்டிக்கேட்டனர். அதற்கு அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்ற ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு பறக்கும்படையினருடன் தகராறு செய்து மிரட்டினர்.
இது குறித்த தகவல் விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் பத்ரூவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சமாதானம் செய்தார். பின்னர் தேர்வு தொடர்ந்து நடந்தது.
இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications