கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீ்ன் மறுப்பு: போலீஸ் காவலுக்கும் அனுமதி மறுப்பு
நெல்லை: நில அபகரிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீன் மறு்ககப்பட்டுள்ளது. மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருமாள்புரம் நில மோசடி வழக்கில் கருப்பசாமி பாண்டியனை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரி நெல்லை ஜெஎம் 1-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மாஜிஸ்ட்ரேட் ராபின்சன் முன்பு விசாரணைக்கு வந்தது. கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திமுக வழக்கறிஞர்கள் ஆவுடையப்பன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருப்பசாமி பாண்டியன் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் மிரட்டினார் என்று கூறுகிறார்களே, அதற்கான ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அவரை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றனர்.
கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் எடுக்கும் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கில் கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் அளித்த மனுவும் விசாரணைக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்போவதாக திமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications