போதிய பாதுகாப்பு செய்த பின்னரே 'பி' அறையைத் திறக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டியினர் கோவிலுக்குள் சென்று ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு நடத்தினர். அப்போது பெருமளவில் வைர, வைடூரிய, தங்க, வெள்ளி நகைக் குவியல் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும் முக்கியமான பி அறையை மட்டும் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த அறையைத் திறந்து பார்த்தால், குடும்பமே நாசமாகி விடும் என தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ குடும்பமும் பி அறையைத் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ஏற்கனவே பலமுறை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா அறையைத் திறந்துள்ளதாகவும், அங்கிருந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புப் புகாரைக் கூறி பெரும் பிரளயத்தை எழுப்பினார்..
இந்த நிலையில், பி அறையை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பி அறையைத் திறப்பதற்கு முன்பு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பிறகுதான் அறையைத்திறக்க வேண்டும். அதேசமயம், இப்போதைக்கு அந்த அறையைத் திறப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களின் மதிப்பைக் கண்டுபிடித்த பின்னர் பி அறையைத் திறப்பது குறித்து யோசிக்கலாம்.
நிபுணர் குழுவின் ஆய்வுச் செலவுக்காக ஆண்டு தோறும் ரூ. 25 லட்சத்தை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும்.
காவல்துறையினர் அளித்துள்ள கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் திருப்தி அடைகிறது. இந்தப் பாதுகாப்பே போதுமானது. காவல்துறையே தொடர்ந்து பாதுகாப்பை அளித்து வரலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications