உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் மீது தாக்குதல்: தங்கபாலு கண்டனம்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி திருச்சியில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி திருச்சியில் காங்கிரசார் கலந்து கொண்ட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியாக நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் வன்முறையாளர்கள் கூட்டமாக புகுந்து தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பல காங்கிரஸ் சகோதர, சகோதரிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உண்ணாவிரதப் பந்தலை பிரித்தும், நாற்காலிகளை தூக்கிப் போட்டு உடைத்தும் கண்மூடித்தனமாக வெறித் தாண்டவமாடி இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் போர்வையில் இவ்வன்முறையை நடத்திய சமூக விரோதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது.
ஆனால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், மேலும் இது போன்ற வன்செயலில் அக்கட்சிக்காரர்கள் ஈடுபடாமலிருக்கும் வகையில் எச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் சேவாதளம் சார்பில் உண்ணாவிரதம்:
இந் நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளம் சார்பில் சென்னை காயிதே மில்லத் மணிமண்டபம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தங்கபாலு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்துக்கு சேவாதள மாநில தலைவர் கோவை செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் அன்பரசு, வள்ளல் பெருமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரமலை, செல்வக்குமார், பலராமன் உள்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications